தந்தை பெரியரின் இலங்கைப் பேருரை
தந்தை பெரியரின் இலங்கைப் பேருரை
உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி. குரு - சிஷ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா , அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளி தரைமட்டமாக்குங்கள். அதன் மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய, மனித சமுகம் சமஉரிமை சமநிலை என்கின்ற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகில் உள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல், பிரிவினைக் கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள். தேச பக்தி தேசியம் என்னும் சூழ்ச்சியானது பல வருஷங்களாக மக்களை அந்நிய நாட்டு நடப்புகளையும், அந்நிய நாட்டு மக்கள் நிலைமையையும் உணரமுடியாமல் செய்து வந்த காரணமே உலக ஒற்றுமை ஏற்பட முடியாமல் இருந்து வருகின்றது.