Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தமிழ்ச்சங்கம் மெய்யா? புனைவா?

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
தமிழர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் என்று பல அறிஞர்களும் கூறி வந்த, கூறிவரும் வேளையில், ஒரு சிலர் மட்டில் தமிழ்ச் சங்கங்கள் நிலவியிருந்தன என்பதே புனைந்துரைக்கப்பட்ட பொய்யுரை என்று இன்றும் கூறுகின்றனர். இதில் எதில் உண்மையிருக்கக் கூடும் என ஆராய முற்பட்ட நான் இதனைத் திறந்த மனதுடனேயே அணுகத் தலைப்பட்டேன். உண்மைக் கூற்று தெளிவான பின்னரே இந்நூலை எழுதத் தலைப்பட்டேன். அதனால் தொடக்கத்திலிருந்தே உண்மையின் பக்கம் நிற்கத் தலைப்பட்டதால், ஒரு சார்பு நிலையை எடுத்தது போன்ற தோற்றம் தெரிய வரும். ஆனால் உண்மை அதுவல்ல என வலியுறுத்த விரும்புகிறேன்.தமிழ்ச் சங்கங்களின் இருப்பையும், காலத்தையும் சரித்திர, இலக்கிய மற்றும் புவியியல் ஆய்வு முடிவுகளின் துணை கொண்டு நிறுவியுள்ளேன்.

அகத்தியன் பற்றிய புனைந்துரைக்கப்பட்ட, நியாயப்படுத்த முடியாத, அறிவுக்குப் பொருந்தாத பல செய்திகள் காணக் கிடைக்கின்றன. அவற்றையெல்லாம் ஆய்வு செய்து அகத்தியன் குறித்த தகவல்களைத் தந்துள்ளேன். இத்தகவல்கள் தரும் உண்மை என்னவெனில் அகத்தியன் புனைந்துரைக்கப்பட்ட பொய் உருவம் என்பதாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பழையதும், காலத்தால் மூத்ததும் ஆன இலக்கண நூலான தொல்காப்பியத்தின் காலத்தை பல அறிஞர்களும் பலவாறாய் கூறிச் சென்றுள்ள நிலையில் என்னுடைய ஆய்வு முடிவையும் தெரிவித்துள்ளேன்.

நான் துறையைச் சார்ந்தவன் அல்ல, வரலாற்று நோக்கில் ஆய்வு செய்த அறிவியல் பட்டதாரி, உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் உள்நோக்கோடு எழுதாமல் என் அறிவுக்கு எட்டிய அளவில் கருத்துகளை முன் வைத்துள்ளேன். இது ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுத்தால் மகிழ்ச்சியடைவேன். நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளையும் வரவேற்கிறேன்.

ந.ராம்குமார்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.