ஸ்டீஃபன் ஹாக்கிங்
ஸ்டீஃபன் ஹாக்கிங்
இந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுபோல் விமானத்திலும், கப்பலிலும் உலகத்தைப் பார்த்தவர்களை முருகன் வகையினர் என்று சொல்லலாம். இன்னொரு வகையினர் பிள்ளையாரைப் போன்றவர்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறுபவர்கள். இந்த இரண்டு வகையினரில்லாமல் மூன்றாவதாக ஒரு வகை இருக்கிறது என்று எனக்கு உணர்த்தியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். உலகம் சுற்றம் மனிதர்களுக்கு மத்தியில் சக்கர நாற்காலியில் இந்த பிரபஞ்சத்தையே சுற்றியவர். சுற்றியதோடு அல்லாமல் எளிமையாக மக்களுக்கு விளக்கியவர். அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்று விவாதம் நடத்து கொண்டிருந்த வேளையில் அறிவியலுக்கு புது சிலபஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்று மற்றும் பணிகளைக் குறித்து மிக எளிமையான தமிழில் உங்களிடம் பகிர்கிறோம்.