சமத்துவப் போராளிகள்
டாக்டர். அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன் போன்றோர்களின் காலத்தில் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் இதுபோன்ற நடவடிக்கைகள் தோன்றியது. ஆனால் இதேகாலத்தில் தலித்து அல்லாத தலைவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் தீண்டாமைக் கொடுமைகளையும், சாதிய மேலாதிக்கத்தையும் எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் கேரளத்தில் நாராயண குரு, தமிழ்நாட்டில் தந்தை பெரியார். ஆனால் தமிழ்நாட்டில் கீழத்தஞ்சையில் கொடூரமான வடிவத்தில் செயல்பட்ட பண்ணையடிமை முறையும் அதன் தொடர்ச்சியான தீண்டாமை கொடுமைகளும் பல நூறு ஆண்டுகள் வரலாற்றில் நீடித்து வந்தது. இதனை எதிர்த்து முதன் முதலில் குரல் கொடுத்தவர்கள் செங்கொடி இயக்கத்தைச் சார்ந்தவர்கள்தான். மார்க்சிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வர்க்க சிந்தனையுடன் மனித சமுதாயத்தைப் பகுத்துப் பார்த்து மனிதனை தீண்டாமை என்ற நடவடிக்கையின் மூலம் அவனைத் தனித்துப் பார்ப்பதோ அல்லது தாழ்த்தி ஒதுக்குவதோ எந்த வகையிலும் ஏற்க முடியாத நாகரிகமற்ற காட்டுமிராண்டித்தனமான செயல் என்று அதனை எதிர்த்துப் போராடியவர்களும் அடங்கிக் கிடந்த தலித்துகளுக்கு வீராவேசத்தை உண்டாக்கி தங்களைத் தாங்கி போராடியவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கம்யூனிஸ்ட்டுகள்தான்– ஏ.லாசர் Ex MLA