புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
குறிப்பிட்ட எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்புகளை மட்டும் தொகுத்தளிப்பது ஒரு வகை.
அந்த எழுத்தாளர் படைப்புகள் குறித்து மற்ற இலக்கியவாதிகள் கூறியதை தொகுத்தளிப்பது மற்றொரு வகை. அந்த வகையில் இந்த நூலானது புதுமைப்பித்தனின் படைப்புகள் குறித்து மற்ற இலக்கிய எழுத்தாளர்கள் கூறிய கருத்துகளின் தொகுப்பாக அமைந்துள்ளது.
புதுமைப்பித்தனின் படைப்புகளை 22 தலைப்புகளாக தொகுத்து விரிவாக ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் சமகால எழுத்தாளர்கள் முதல் தற்கால படைப்பாளிகள் வரையிலான கருத்துகள் கட்டுரைகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புத் தெளிவு, அவரது ஆரம்பகால கதைகள் என அனைத்து நிலைகளிலும் அவரது படைப்புகள் அலசி ஆய்வுக்கு உள்படுத்தப்படும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன.
புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மேல்நாட்டுக் கதைகள் மொழியாக்கம் குறித்த விமர்சனம் இந்த நூலில் தெளிவாக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பித்தனை பாராட்டியும் கண்டித்தும் எதிரெதிர் நிலையில் விமர்சிக்கப்பட்டு கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியரின் இத்தகைய முயற்சியால் காலந்தோறும் தொடர்ந்து புதுமைப்பித்தன் படைப்புகள் வாசிக்கப்படுவதற்கான சூழல் உருவாகும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.