
பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
ரஷிய புரட்சியாளர் லெனின் எழுதிய இந்த நூல், ஆழமான தத்துவங்களைக் கொண்ட்டிருக்கிறது. பொருள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது; அதில் இருந்து தோன்றும் எண்ணங்கள் பொருள்முதல்வாதம் என்பதும், ஆன்மிகவாதம், கடவுள் நம்பிக்கை போன்றவை கருத்துமுதல்வாதம் என்பதும், அனுபவ ரீதியான உற்று நோக்குதல் மூலம் சரிபார்க்கப்பட்ட விவரங்களின் விஞ்ஞான முறைகள் அனுபவவாதம் என்பதும் சொல்லப்பட்டுள்ளன. இந்த நூலில் அனுபவவாத அடிப்படைகளை, பொருள்முதல்வாதத்துடன் லெனின் ஒப்பிட்டு விமர்சனம் செய்து இருக்கிறார். நூலின் மொழிபெயர்ப்பாளர் கூறியிருப்பது போல, லெனின் கருத்துகளை ஊன்றிப் படித்தால் மட்டுமே அவற்றின் பொருளை நன்கு அறிந்து கொள்ள முடியும் என்ற வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.