பெரியார் பேசுகிறார் (பானு பதிப்பகம்)
Original price
Rs. 100.00
-
Original price
Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00
-
Rs. 100.00
Current price
Rs. 100.00
தோழர்களே! நான் "தமிழர்கள்” என்பது பற்றிப் பேசுவது, திராவிடர்கள் என்பது பற்றியே ஆகும். திராவிடம் என்றாலும், தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான். இது சரித்திர ஆராய்ச்சிக்காரர் முடிவாகும். திராவிடம் என்கின்ற பேச்சே தமிழ் வார்த்தை ஆகும். எப்படி எனில், திருஇடம் என்பதுதான் திருவிடமாகி, திராவிடம் என்பதாக ஆகிவிட்டது. தமிழர்கள் திரு என்கின்ற வார்த்தையை ஒரு மேன்மை அணியாக உபயோகிக்கிறார்கள். அதாவது ஆரூரை திருவாரூர் என்றும், பூந்துருத்தியை திருப்பூந்துருத்தி என்றும், நாகேசுவரத்தை திருநாகேசுவரம் என்றும் குற்றாலத்தை திருக்குற்றாலம் என்றும், அழைத்து வருவதைப் போலவே தமிழர்கள் தாம் வாழும் இடத்தை திருஇடம் என்றனர்.