பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்
பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்
இந்நூல் பார்ப்பனர்கள் செய்த சதிகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துகிறது.
நூலாசிரியர் பற்றி தந்தை பெரியார் கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும், தொண்டாற்றவும் இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழு நேரத் தொண்டர்களாக இன்னும் சில பேர் வேண்டி இருக்கிறது. இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு தனது குடும்ப பெரிய சொத்து நிர்வாகத்தையும் விட்டு மற்றும் பல் பணத்தோடு வரக்கூடிய சவுகரியத்தையும் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்து கொண்டு , கழகத்துக்கு ஒரு வேலை ஆளாக 3, 4 ஆண்டாகத் தொண்டாற்றி வருகிறார். இந்த நாட்டில் சொந்த சுயநலம் கருதாமலும், பொதுப் பயனுள்ளதுமான தொண்டாற்றிவரும் கழகம் திராவிடர் கழகம் ஒன்றுதானே இருந்து வருகிறது? இக்கழகத்தில் இருப்பவர்கள்தான் சுயநலமில்லாமல் பாடுபடுகிறார்கள். மற்ற கழகங்கள் கழகத்தால் சுயநலம் பயன் அடையக்கருதி பாடுபடுபவை: அதுவும் பயனற்ற, உண்மையற்ற காரியத்திற்கு "பாடுபடும் கழக ங் களாகத் தானே , இருக்கின்றன.