
நாங்கூழ்
இருத்தலை ஊதி இடம் நகர்த்தும்
காற்றின் பாதை
மெல்ல நகர்கின்றது
அந்தரமான வாழ்வின் இரேகைகள்
அடங்கிய இரகசியங்கள்
அறிப்படாமலும்
புரியப்படாமலும்
தரை மோதியே அழிகின்றன
காற்றை விழுங்கிய
வளிக்குமிழிக்குள்
எவ்வளவு காற்று
மூச்சுத் திணறியிருக்கும்
மிதத்தலின் நீட்சி
அந்தம் வரை
இறுகப்பற்றி செல்லும் வாழ்வே
மின்ஹா
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.