நாம் ஏன் அடிமை ஆனோம்?
நாம் ஏன் அடிமை ஆனோம்?
தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே ‘நாம் ஏன் அடிமையானோம்?’ எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. 2008, 2012, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற புத்தகத்திருவிழாக்களிலும் 2020ஆம் ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறாத காரணத்தால் காணொலி அரங்கின் வாயிலாகவும் வெ.இறையன்பு அவர்கள் ஆற்றிய உரைகள் வரிசைக்கிரமமாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சமூகம், கலை, இலக்கியம், இயற்கை, வரலாறு, தத்துவம், அறிவியல், போர்கள், ஆன்மீகம், புத்தகங்கள், விலங்குகள், காடுகள் என இன்னுமின்னும் ஏராளமான அம்சங்கள் குறித்து விரிவான தளத்தில் நிகழ்த்தப்பட்டவை இவ்வுரைகள். இவற்றை நேரில் கேட்டுப் பயனுற்றவர்களையும் கடந்து அனைத்துத் தரப்பினரையும் சென்று சேரவேண்டும் எனும் நோக்கில் எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் எழுத்தாக்கம் செய்யப்பட்டு தற்போது நூல் வடிவம் தரப்பட்டுள்ளது. மேன்மையான கருத்துகளையும் அரிய தகவல்களையும் செய்திகளையும் உள்ளடக்கியுள்ள இந்நூல் அனைவரும் படித்துப் பயனுறும் வகையில் சிறப்பாக வெளிவந்துள்ளது.