நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம் - Ko.Saami Durai
நா.வா.ஆய்வுகளில் நாட்டார் கலை இலக்கியம் - Ko.Saami Durai
நாட்டுப் பாடல்கள், எழுதப்பட்ட இலக்கியத்திற்கு முன்பே தோன்றியவை. எழுதப்பட்ட இலக்கியம் நாட்டுப் பாடல்களினின்றும் தோன்றி பின் வேறுபட்டு தனி வகுப்பாகப் பிரிந்துவிட்டது. ஆனால், தேக்கம் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், நாட்டுப் பாடல்களோடு தொடர்பு கொண்டு உயிராற்றல் பெற்று வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. சங்க இலக்கியத் துறைகளின் அகப்பாடல்களும், புறப்பாடல்களில் பலவும் நாட்டுப் பாடல் கருவினின்றும் வளர்ச்சி பெற்றவையே. நமது முதற் காவியமான சிலப்பதிகாரத்தில் காவியக்கருவான கோவலன் - கண்ணகி-மாதவி கதையும், நாட்டுப்பாடல், வரிப்பாடல்களும், துன்பமாலையும், நாட்டு மக்கள் வணக்க முறைகளும் இணைந்து, இரு நீரோட்டங்கள் சங்கமித்து பெருக்கெடுத்தோடுவதுபோல அமைந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.