Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

மலேசியா சிங்கப்பூரில் பெரியார்

Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பே, உலகப் புகழ் பெற்று விளங்கியவர், ஈ.வெ.ரா.பெரியார், சிறந்த சிந்தனையாளர், பகுத்தறிவுவாதி, இருபதாம் நூற்றாண்டின் சாக்ரடீஸ் என்றெல்லாம் புகழப்பட்டார்.

1929-30இல், அவர் முதன் முறையாக மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அந்த சுற்றுப்பணத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது, இந்தப்புத்தகம். பெரியாருக்கு மலேசியத் தமிழர்கள் அளித்த வரவேற்பு, பெரியாரின் பகுத்தறிவு பிரச்சாரம், பெரியாருக்கு அந்நாட்டு தலைவர்கள் சூட்டிய புகழாரம் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

1954-55இல் பெரியார் இரண்டாவது முறையாக மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அதைப் பற்றிய முழு விவரங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்நூல் 7 பகுதிகளையும் 123 உட்தலைப்புகளையும் கொண்ட நூலாகும். திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் மலாய் நாட்டு பயணம் நாகையில் கப்பலேறல், தமிழர் சீர்திருத்த மாநாட்டில், வரம் கொடு சாமி, பினாங்கில், மலேசிய தந்தை தாடி, மலேசியாவில் பெரியார் – சாமி சிதம்பரனார், தமிழ்முரசு தலையங்கம், கோலாம்பூரில் பெரியார், சிங்கப்பூரில் பெரியார், பெரியாருக்கு மலாயா மக்களின் மாபெரும் வழியனுப்பு உபசாரம், பெரியாருக்கு சென்னையில் மாபெரும் வரவேற்பு, ஆரியர் ஆதிக்கத்தை விரட்டும் போராட்டத்தில் வெற்றி கண்டே தீருவோம்- பெரியார் பேரூரை, தமிழகமும் – கடல் கடந்த தமிழரும், கோலாம்பூரில் ஒரு சோற்றுக்கடைப் பார்ப்பனின் விஷமம், மலாய் நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள், சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம், கோலாம்பூரில் சுயமரியாதை திருமணம், கோலாம்பூர் சுயமரியாதைச் சங்கம் மூன்றாவது ஆண்டு ஆரம்ப விழா பொதுக்கூட்டம் , சிங்கையில் பெரியார் பிறந்த தின வைபவம் ஹேப்பி வோர்ல்டில் சீனப் பிரமுகரின் தமிழ்ப்பேச்சு, பினாங்கில் பெரியார் பிறந்த நாள் விழா, பெரியாரின் முழக்கம் ஒன்றே திராவிடரைத் தலைதூக்கச் செய்தது – மலேசியாவில்  பெரியார் பிறந்தநாள் விழா, சிங்கப்பூர் நேவல்பேசியில் பெரியார் 81 ஆவது பிறந்தநாள் விழா, சிங்கப்பூரில் குடிஅரசு சந்தாதாரர்கள் -1, பார்ப்பனரல்லாதார் மத்திய பிரசாரக் கமிட்டிக்கு மலாக்கா.