இந்துத்துவா என்றால் என்ன?
தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற கடவுள்களை வணங்குபவர்கள் தங்களை இந்துக்கள்,'என்றும் தங்கள் மதம் இந்துமதம்' என்றுதான் , பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் 'இந்துத்துவா' என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி., பாரதிய ஜனதா கட்சி ஆகிய அமைப்புகள் கடைபிடித்துவரும் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றுக்கும் எந்தவித சம்மந்தமும்' இல்லை, கருப்பண சாமியையோ, முனியப்ப , 'சாமியையோ வழிபடுவர் 'கிடா வெட்டி பொங்கல் வைப்பர்; ஆனால் இந்துத்துவா பேசுபவர்களோ, மகாத்மா காந்தியை சுட்டுக் கொண்ட கோட்சேக்கு படையல் வைப்பவர்கள். அவர்கள் யார், அவர்கள் _ யாருடைய நலனுக்காக பணியாற்றுகின்றனர் , அவர்களது மதவெறியின் அடிப்படை என்ன என்பது - போன்ற சந்தேகங்களை வினா விடை வடிவில் எளியதமிழில் விளக்கும் நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.