இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
நாங்கள் மதத்திற்கு விரோதி. எந்த மதத்தையும் ஏற்காதவர்கள். ஆனால், எல்லா மதத்தவர்களும் சமமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது ஒருவர், இன்னொருவரை அழிக்க வேண்டும், குத்த வேண்டும். கொலை செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டோமே. உனக்கு இருக்கின்ற உரிமை சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த இஸ்லாமியருக்கு இருக்க வேண்டும். பெரும்பான்மைச் சமுதாயத்திற்கு இருக்கக் கூடிய உரிமை சிறுபான்மை சமுதாயத்தினரான கிறிஸ்தவருக்கும் இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் பகுத்தறிவு மனிதநேயம். இந்து முன்னணி என்ற அமைப்பிலே தமிழர்கள் இருக் கிறார்கள் என்று சங்கடப்பட்டீர்களே, அந்தத் தமிழர்களைத் திருத்துவதற்காக இன்று நாம் இந்த மாநாடு போட்டிருக் கின்றோமே தவிர, அவர்களை நம் எதிரிகளாக மாற்றி, சங்கடப்படுத்த வேண்டும் என்பதல்ல. காரணம். நம்மைப் பொறுத்தவரையிலே இந்த இயக்கம் திருந்து அல்லது திருத்து இந்த இரண்டே சொற்களிலே அமைந்த இயக்கம்தான் இந்த இயக்கம். நாங்கள் சொல்வது தவறு என்று சொன்னால் எங்களைத் திருத்துங்கள். நீங்கள் தவறாக இருக்கிறீர்கள் என்றால் திருந்துங்கள். நாங்களும் திருந்த மாட்டோம். உங்களையும் திருந்தவிடமாட்டோம் என்றால் இந்தக் காலத்தில் இனிமேல் நடக்காது.