Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

எந்திர அறிஞன்

Original price Rs. 0
Original price Rs. 150.00 - Original price Rs. 150.00
Original price
Current price Rs. 150.00
Rs. 150.00 - Rs. 150.00
Current price Rs. 150.00

மொழிபெயர்ப்பு, கூகுள் மேப், வீட்டுக்கு உணவு வரவழைப்பதற்கான செயலி போன்றவை வழியே நாம் ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டை நுகரத் தொடங்கி விட்டோம். எதிர்காலத்தில் அலைபேசி, கணினி போன்ற கருவிகளையும் கடந்து, இன்னும் கூடுதலான தளங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித குலத்துடன் உறவாட உள்ளது. மனிதனைப் போலவே சிந்திக்கும் திறனை கணினிக்கு அளிப்பதுதான் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை. அதைப் பற்றிய சுவாரஸ்யமான உரையாடலை இந்நூல் நிகழ்த்துகிறது.

செயற்கை நுண்ணறிவுக்கு வழிவகுத்த முந்தைய முயற்சிகள், அதில் ஏற்பட்ட சறுக்கல்கள், இறுதியில் அந்த தொழில்நுட்பத்துக்கு அறிஞர்கள் வந்தடைந்தது. இனியும் உள்ள சவால்கள் என ஒரு பயண விவரிப்புபோலச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. கணினி அறிவியல் சார்ந்த விளக்கங்களால் வாசகர்களுக்கு அலுப்புத் தட்டிவிடாத விதத்தில் எளிமையான நடையில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. 1956இல் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமான பனிப்போருக்கு இடையே 'Artificial Intelligence என்கிற இதே பெயரில், மனிதச் சிந்தனை வாய்ந்த கணினியை உருவாக்க முனைந்த வரலாறு சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நூலின் ஆசிரியரான வினோத் ஆறுமுகம், இணையவழிக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருபவர். 'எந்திர அறிஞன்' ஆன செயற்கை நுண்ணறிவின் நன்மை. தீமை ஆகிய இரண்டையும் உணர்ந்து செயல்பட்டால், மனித வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்கள் பெருகும் என்கிற அவரது நம்பிக்கை கட்டுரைகளில் ஒலிக்கிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் வினோத் ஆறுமுகம்
பதிப்பு முதல் பதிப்பு - 2024
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00

ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்

Manjul Publishing House
In stock

உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பி...

View full details
Original price Rs. 399.00 - Original price Rs. 399.00
Original price
Rs. 399.00
Rs. 399.00 - Rs. 399.00
Current price Rs. 399.00
Original price Rs. 122.00 - Original price Rs. 122.00
Original price
Rs. 122.00
Rs. 122.00 - Rs. 122.00
Current price Rs. 122.00

அறிவுக்கு ஆயிரம் கண்கள்

Payil Pathippagam
In stock

நானே ஒரு விஞ்ஞானியாக உணர்கிறேன்! ‘...இந்து தமிழ் திசை’ இணைப்பிதழில் அறிவுக்கு ஆயிரம் கண்கள் தொடர் வெளியானபோது, வாசகர் அனுப்பியிருந்த ஜூன் 3,2021 கட...

View full details
Original price Rs. 122.00 - Original price Rs. 122.00
Original price
Rs. 122.00
Rs. 122.00 - Rs. 122.00
Current price Rs. 122.00
Original price Rs. 55.00 - Original price Rs. 55.00
Original price
Rs. 55.00
Rs. 55.00 - Rs. 55.00
Current price Rs. 55.00

நுண் கலைகள்

பூம்புகார் பதிப்பகம்
In stock

ஆதிகாலத்தில் மனிதன் காட்டு மிராண்டியாக வாழ்ந்த காலத்தில் தங்க வீடும் உடுக்க உடையும் உண்ண உணவும் உண்டாக்கிக் கொள்ளத் தெரியாமல் விலங்கு போல அலைந்து த...

View full details
Original price Rs. 55.00 - Original price Rs. 55.00
Original price
Rs. 55.00
Rs. 55.00 - Rs. 55.00
Current price Rs. 55.00
Original price Rs. 360.00 - Original price Rs. 360.00
Original price
Rs. 360.00
Rs. 360.00 - Rs. 360.00
Current price Rs. 360.00

அறிவுத் தேடல்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

அறிவுத்தேடல் என்பதே கற்றதை மக்களுக்குச் சொல்லுவதும், மக்களுக்குச் சொல்லும் போதே மறுபடியும் கற்றுக் கொள்வதும்தான். ஸ்டீபன் ஹாக்கிங்கிடம் "இன்னும் சி...

View full details
Original price Rs. 360.00 - Original price Rs. 360.00
Original price
Rs. 360.00
Rs. 360.00 - Rs. 360.00
Current price Rs. 360.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

தவிர்க்கப்பட்டவர்கள்

விடியல்
Low stock

தவிர்க்கப்பட்டவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைக் கோள் அனுப்பும் அளவுக்கு, இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற நிலையிலும், மனிதனின் மலத்தை மன...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00