திராவிடத்தால் வாழ்ந்தோம்:Manushya Puththiran
திராவி்டம் என்பது ஒரு நிலப்பரப்பு சார்ந்த சொல் மட்டுமல்ல; ஒரு இனக்கூட்டம் சார்ந்த வரையறை மட்டுமல்ல; திராவிடம் என்பது ஒரு அரசியல், பொருளாதார சமூக சித்தாந்தம். இனரீதியாகவும் மொழிரீதியாக, சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் தங்கள் மீட்சிக்காக கண்டடைந்த சித்தாந்தமே திராவிடம்.திராவிடம் என்பது ஒரு தனித்த அடையாளத்திற்கான, நமது பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டு மரபின் மேன்மைகளுக்கான போராட்டத்தின் குரல். திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற கட்டுக்கதைகள் இடைவிடாமல் பரப்பப்படும் ஒரு காலத்தில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது. திராவிட இயக்கம் சமூக நீதிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் ஒரு நூற்றாண்டுகாலமாக ஆற்றியிருக்கும் மகத்தான பங்களிப்புகளை வரலாற்றின் வெளிச்சத்தில் நாம் அழுத்தமாகச் சொல்வது மட்டுமல்ல, திராவிடத்திற்கு எதிராகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் பொய்களை எல்லா தளங்களிலும் உடைத்தெறிய வேண்டியிருக்கிறது. இந்த நூலின் கட்டுரைகள் திராவிட இயக்கம் பற்றிப் பேசுகின்றன. தலைவர் கலைஞரைப் பற்றிப் பேசுகின்றன. தளபதியைப் பற்றிப் பேசுகின்றன. திராவிட அரசியலின் அடிப்படையில் சமகால அரசியல் நிகழ்வுகளைப் பேசுகின்றன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.