Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

தெய்வங்களும் சமூக மரபுகளும்

Original price Rs. 100.00 - Original price Rs. 100.00
Original price
Rs. 100.00
Rs. 100.00 - Rs. 100.00
Current price Rs. 100.00
தெய்வங்களின் வடிவமும் குணமும் அவை சார்ந்த சமூகத்தின் தேவைகளையொட்டி அமைந்தவைதாம். கால்நடை
வளர்ப்பபோரின் தெய்வம் மாடுகள், கன்றுகள் சூழ்ந்தபடி
கையில் புல்லாங்குழலுடன்தான் இருக்க முடியும். உழவர்களின்
தெய்வம் மழை தருகின்ற இந்திரனாகவோ, கையிலே கலப்பை
ஏந்திய பலராமனாகவோதான் இருக்கமுடியும், சுருக்கமாகச்
சொன்னால் ஒரு குறிப்பிட்ட இனக்குழு என்ன வகை
உற்பத்தி முறையினைச் சார்ந்திருக்கிறதோ அதைப் பொறுத்து
அத்தெய்வங்களின் வடிவங்களும் குணங்களும் அத்தெய்வத்தைப்
பற்றிய கதைகளும் அமையும்.

தம்முடைய கிராமப்புறத் தேவதைகள் எல்லாம் கையிலே
காவலுக்குரிய ஆயுதங்களையே ஏந்தியிருக்கின்றனவே, ஏன்?
பயிரைக் காத்தல், கண்மாயிலிருந்து பாய்கின்ற நீரைக் காத்தல்,
விளைந்த பயிரைப் பகைவரிடமிருந்து காத்தல், அறுவடை
செய்த தானியங்களைக் காத்தல், உழவுக்கு வேண்டிய
கால்நடைகளைப் பகைவரிடமிருந்து காத்தல், ஊர் எல்லையில்
நின்று எதிரிகளிடமிருந்து ஊரைக் காத்தல் - இந்தக் காப்பு
நடவடிக்கைகள் தாம் நேற்றுவரை கிராமப் பொருளாதாரத்தின்
அடிப்படை. எனவே இந்த மக்களின் தெய்வங்களெல்லாம்
இந்த மக்ளைப் போலவே ஏதேனும் ஓர் ஆயுதம் ஏந்தி,
காவலுக்குரிய வயல்களின் ஓரத்திலும் கண்மாய்க் கரையிலும்,
ஊர் மந்ததையிலும் ஊர் எல்லையிலும் அயராது கண் விழித்து
நிற்கின்றன. 

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.