Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

தலித் திரைப்படங்கள்

Original price Rs. 290.00 - Original price Rs. 290.00
Original price
Rs. 290.00
Rs. 290.00 - Rs. 290.00
Current price Rs. 290.00

தமிழில் 1930களில் சினிமா அறிமுகமானபோது அது பெரும் பாலும் பிராமணர்கள் மற்றும் இடைநிலைச் சாதியினரின் கையில் இருந்தது. சுமார் அறுபது வருடங்கள் நீண்ட மிகப் பெரிய போராட்டத்துக்குப் பின்னரே காட்சி ஊடகத்திலும் தலித்துகளின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. தலித் விடுதலையை, வரலாற்றை, வாழ்வியலை, அரசியலைப் பேசும் திரைப்படங்கள் உருவாகி, கவனம் பெற ஆரம்பித்தன.

அவ்வாறு இந்திய மொழிகள் அனைத்திலும் வெளிவந்து, கவனம் பெற்ற தலித், தலித் சார்பு திரைப்படங்கள் இந்நூலில் சீராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கதையை விவரிப்பதோடு நிறுத்திவிடாமல் திரைப்படத்தில் பேசப்படும் உரிமைக்குரல் மற்றும் சமூகச் சமத்துவப் பார்வையைக் கவனப்படுத்தி ஆராய்ந்துள்ளார் சுரேஷ் கண்ணன். திரைப்படம்,தொலைக் காட்சி உள்ளிட்ட ஊடக வடிவங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து பல நூல்கள் எழுதியவர்.

நல்ல திரைப்படங்களில் ஆர்வம் உள்ளவர்களும் தலித் அரசியலில் அக்கறை கொண்டவர்களும் கற்பதற்கும் விவாதிப்பதற்கும் இதில் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.