கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம்
மனிதகுல மேன்மைக்காக தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணம் செய்தவர் பேரறிஞர் மார்க்ஸ் – மேதை என்ற சொல்லுக்கு உரிய அவரும் எங்கெல்சும் உருவாக்கிய இக்வறிக்கை உலகைப் புரட்டிப்போட்ட நூல். பல நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். வழிகாட்டி மரமான தொழிலாளர் வாழ்க்கை என்று மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் பாட்டாளிகளைக் குறிப்பிடுவார். தொழிலாளி வர்க்கம் ஆளப்பிறந்தது என்று அடையாளம் காட்டியவர் மார்க்சும், எங்கெல்சும் ஆவர்.
வரலாறுகளில் பல மன்னர்கள் வருவர். அவர்களது ராஜரிஷி என்றும், வழிகாட்டிகள் என்றும் சாணக்கியர் போன்றவர்களின் பெயர்களும் வரும். ஆனால், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு வழிகாட்டிகள் இவ்வறிக்கையின் மூலவர்கள். வரலாறு, பொருளியல், தத்துவஇயல், அரசியல் அனைத்தும் இந்நூலில் உண்டு. செயற்கரிய செய்வர் பெரியர் – என்ற குறளுக்கு ஏற்ப அரிய செயலைச் செய்த அறிஞர்களின் நூல்பற்றிதான் இந்நூல் பேசுகிறது.