
பாரதியாரும் தாழ்த்தப்பட்டோரும்
"பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்பாலித்திட வேண்டும் அம்மா” என்று பாரதியார் தன் பாட்டால் சமுதாயத்தில் மிகவும் பின்தங்கியவர்களை உயர்த்திக் காத்தல் வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால்தான்,
"பறையருக்கும் இங்குத் தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை” என்று ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு விலங்குகள் நடமாடும் இடத்தில்கூட நடக்க முடியாமல் இருந்தவருக்கு அவரால் விடுதலைக் கீதம் இசைக்க முடிந்தது.
அவருக்கு முன் வாழ்ந்த எந்தக் கவிஞனும் தாழ்த்தப் பட்டவருக்குச் செய்திராத அரிய பெரிய காரியங்களை மகாகவி பாரதியார் செய்துள்ளார். இக்கட்டுரையில் அவர் தாழ்த்தப் பட்டோருக்கு ஆற்றிய அரிய தொண்டுகளைப் பார்ப்போம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.