பாரதிதாசன் படைப்புக்கலை
இலக்கியப் படைப்பாளன் தான் கண்ட கவினுறு காட்சியை நெஞ்சில் நிறுத்திப் பின்னர் தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற உணர்வோடும் சுவையோடும் எடுத்து இயம்புவான் அங்ஙனம் அவன் படைக்கும் இலக்கியப் படைப்பு பல்பிற்வி எடுத்த பின்னரெ செப்பம் பெரும் என்பது அறிஞ்ர் கருத்து.
டாக்டர் மு. வரதராசனார், டாக்டர் மெ. சுந்தரனார் ஆகியோர் மேற்பார்வையில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் இயல் ஆய்வறிஞர் ச.சு. இளங்கோ அவர்கள் சமர்ப்பித்த ஆய்வேட்டின் சீர்மைப்படுத்தப் பட்ட வடிவமே இந்நூல்.
ஒட்டுமொத்தமான பாரதிதாசன் படைப்புகளில் கதைப்பாடல்கள் உருவாக்கம், அவரது படைப்புகளில் பெண் பாத்திரங்கள், உருவகப் பாத்திரங்கள், கதைப்போக்கு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும், விரிவாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தெழுதப்பட்டுள்ள இந்நூல் மிகச் சிறப்பானதொரு அரிய படைப்பாக விளங்குகிறது. தமிழ்கூறு நல்லுலகினர் புரட்சிக் கவிஞரின் படைப்புகளை மேலும் செம்மையாக அனுபவித்துச் சுவைக்க இந்நூல் வகை செய்கிறது.