அண்ணாவின் தன் வரலாறு
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
அண்ணாவின் தன் வரலாறு - Anna Parimalam
பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி தமிழகத்திலே பல அறிஞர்கள், பல ஆராய்ச்சி மாணவர்கள், வெவ்வேரு தலைப்புகளிலே கணக்கிலடங்கா நூல்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அருமைத்தம்பி பரிமளம், பேரறிஞர் அண்ணாவின் தன் வரலாறு என்ற தலைப்பில் - அண்ணா அவர்கள் பல்வேரு காலகட்டங்களிலே ஆற்றிய உரைகள், பொதுக் கூட்டங்களிலே, இலக்கிய மேடைகளிலே, சட்டப் பேரவையிலே, மற்றும் தம்பிக்கு எழுதிய கடிதங்களிலே தெரிவித்த கருத்துக்கள் - ஆகியவற்றைத் தொகுத்து ஒரு அருமையான நூலினை நமக்கு வழங்கியிருக்கின்றார்.
அண்ணா அவர்களே தனது வாழ்க்கை வரலாற்றை எழுதுவதைப் போல இந்த நூல் அமைந்துள்ளது. அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் பெருமளவிற்கு அப்படியே இடம் பெற்றிருப்பதால், அண்ணா அவர்களே தொடர்ந்து எழுதியதைப் போல படிப்பவர்களுக்கு தோன்றும் விதத்திலே தம்பி பரிமளம் இந்நூலினை சிறப்பாகத் தொகுத்திருப்பது பாராட்டுதற்குரிய செயலாகும். இதனை நூலாகத் தொகுத்திட தம்பி பரிமளம் பல நாட்கள் செலவிட்டுருக்க வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.