Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...

Original price Rs. 110.00 - Original price Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00 - Rs. 110.00
Current price Rs. 110.00
இரவில், வெறிச்சோடிய நிலப்பரப்பில்,
ஒரு காலியான தெருவில்,ஒரு பாடைக்குப் பின்னால் நடந்து செல்லும்
ஒருவனின் உருவத்தை நான் சில நேரங்களில் காண்கிறேன்.நான்தான் அந்த மனிதன்.நீதான் அந்தப் பாடையில் இருக்கிறாய்.உனது இறுதிச் சடங்கில் நான் இருக்க விரும்பவில்லை.உனது அஸ்தியைக் கொண்ட ஒரு கலசத்தை நான் ஏந்த விரும்பவில்லை'

என்று எழுத்தாளர் ஆந்த்ரே கோர்ஸ் தனது மனைவிக்கு எழுதியுள்ள இந்த நீண்ட கடிதத்தை ஒரு தற்கொலைக் குறிப்பாகவும் கொள்ளலாம்.

இதை எழுதிய அவரும், அவரது மனைவியும் ஒன்றாக தமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் உடல்கள் உறங்குவது போல படுக்கையில் அருகருகே அமைதியாகக் கிடந்தன.

போர்க் காலத்தில் தான் பிறந்த தேசத்தை விட்டுப் பிரிந்த இரண்டு தேசத்தவர்கள் வேறொரு தேசத்தில் காதலித்து, ஒன்றிணைந்து வறுமையோடு போராடி பின்னாட்களில் உலகம் போற்றும் வல்லமை மிக்க தம்பதிகளாக மாறிய அற்புதமான, நெகிழ்ச்சியான, உண்மையான காதல் காவியம் இது. உண்மையான காதல் ஜோடிகளால் தமது இணையை எவ்வளவு தீவிரத்துடன் நேசிக்க முடியும் என்பதற்கான சிறந்த ஆதாரமாக இந்த நூலை முன்வைக்கலாம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.