பிளேட்டோவின் குடியரசு
அமரவாழ்வு பெற்ற தத்துவஞானி பிளேட்டோ ( கி. மு. 430-347 ) உரையாடல் உருவில் அமைந்த ‘ குடியரசு ‘ என்னும் இந்நூலில் பண்பு பற்றிய அடிப்படைப் பிரச்னைகள் சிலவற்றை எழுப்புகிறார். ‘ முறையான வினாக்களைத் தொடர்ந்து கேட்டிக்கொண்டே விடைகாணுதல் ‘ என்னும் ‘ சாக்ரட்டீஸ் ‘ முறையில் ஆராய்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எழுதப்பட்டதெனினும், பிளேட்டோவின் ‘குடியரசு’ கலங்கி நிற்கும் மனித குலத்திற்கு அறிவு வழங்கும் கருவூலமாய் இன்னும் திகழ்கிறது. இதன் மையக் கருத்துகள் மங்காது ஒளிவிடுபவை. தனி மனிதனுக்காக நீதி, சமுதாயநெறி ஆகியவற்றை ஆராய்கிறபோது கல்வி, அரசு, குழந்தைகள், பெண்டிர் சமுதாயம், அழகு, சத்தியம், நல்ல தன்மை மற்றம் இவற்றொடு இணைந்த பல கருத்துகளையும் விமர்சிக்கிறார் பிளேட்டோ. மனிதகுலத்தின் சிந்தனை பரவிவரும் வரலாற்றுப் பாதையில் மூன்று புதிய கருத்துகள் முதன் முதலாக இந்த நூல்தான் உதயமாகின்றன. அவையாவன; மக்கட் சமுதாயப் பொது முன்னேற்றத்துடன் தனி மனிதனுடைய முன்னேற்றமும் இணைந்து செயல்படும் த்த்துவம்; வாழு வாழவிடு; என்ற குறிக்கோள்; வேறு எப்பயனையும் கருதாது, அறத்தைக் கடைப் பிடித்து ஒழுகுதல். ஆர். இராமனுஜாசாரி அவர்களால் தமிழாக்கம் செய்யப் பட்டு 1965 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகத்தின் மறு பதிப்பைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.