நாம்என்னநினைக்கிறோமோ,அதுவாகவேஆகிறோம் என்பது ஒரு முக்கியமான பொன்மொழி. எண்ணம் போல் வாழ்க்கை என்பது நாம் அடிக்கடி கேட்கும் பொன்மொழி.
நம்எண்ணத்தைஎப்படிமேம்படுத்திக்கொள்வது?
எண்ணம் மட்டும் இருந்தால் போதாது, அதை செயலாக்க வேண்டும். எப்படிஅதைசெயல்களாகமாற்றுவது?
செயலாக மாற்றினால் மட்டும் போதாது, அதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
அதற்கு செயல்களை "பழக்க வழக்கமாக" மாற்றிக்கொள்ளவேண்டும்?
எப்படிபழக்கவழக்கங்களைகட்டமைப்பது?
இந்த கேள்விகளுக்கான விடைகளை தான் இந்த புத்தகம் தரப்போகிறது.
இது இன்னொரு சுய முன்னேற்ற நூலா? இதை செய், அதை செய் என்று சொல்லும் இன்னொரு நூலா?
இதை சுய முன்னேற்ற நூலாகவும் பார்க்கலாம். நான் ஒரு சமூக புரிதல் உள்ள மனிதன். என்னை பொறுத்தவரை தனி மனிதன் என்பவன் சமூகத்தின் ஒரு அங்கம் தான். நம்மைநாம்மேம்படுத்திக்கொள்வதுசமூகத்தையும்மேம்படுத்துவதாகவேபார்க்கிறேன். நாம்மனிதஆற்றலைமுழுமையாகபயன்படுத்தஆரம்பிக்கும்போது, அதன்பலன்சமூகத்திலும்எதிரொலிக்கும். அந்த வகையில் இந்த புத்தகம் சுய முன்னேற்ற நூலை விட ஒரு படி மேலானதாகவே இருக்கும் என நம்புகிறேன்.
மிக முக்கியமாக, பெரும்பாலான தமிழர்களுக்கு மிக கூர்மையான சமூக பார்வை உண்டு, அரசியல் பார்வை உண்டு. அதனால் தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித்து தெரிகிறது. கல்விக்கு தமிழர்கள் மிக முக்கிய இடத்தை கொடுத்து இருக்கின்றனர். ஆனால், பெரிய கனவுகளை நோக்கி தமிழர்களை தடுக்கவும் இங்கே பலர் வேலை செய்து வருகிறார்கள்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து,
விரலுக்கு ஏத்த வீக்கம்
என பொன்மொழிகளை சொல்லி, நாம் எதையுமே சராசரியாகவே செய்ய பழக்கப்படுத்தப்பட்டுளோம். இதனால், நம்மில் பலரும் மாத சம்பளத்திலும், தொழிலாளிகளாகவும், நடுத்தர, மேல் நடுத்தர வாழ்க்கையிலுமே இருந்துவிடுகிறோம்.
தட்டுத்தடுமாறிமேலேஏறிசெல்லும்தமிழர்களையும் - ஆன்மிகம், இயற்கைவிவசாயம், கார்ப்பரேட்சதி, உணவேமருந்து, இலுமினாட்டிகள், வெளிநாட்டுவாழ்க்கையின்அவலம்என்றெல்லாம்சொல்லிபின்னுக்குஇழுக்கிறார்கள். நம்மக்களும்இந்த "பிரச்சாரங்களுக்கு" மயங்கி, இருக்கும்வேலையைவிட்டுவிட்டு“அடிமைகளாக”தொடர்ந்துவிடுகிறார்கள். நம்மிடம் இப்படி பிரச்சாரம் செய்பவர்களோ "கோடிகளில்" பணம் சம்பாதிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
இந்தபுத்தகத்தின்அடிநாதமாகஇருப்பது "GrowthMindset" என்கிறஒருகோட்பாடாகும். அது என்னவென்று, முதல் அத்தியாயத்தில் தெரிந்துக்கொள்வீர்கள்.
இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது, உங்களுக்கு புதிய பல அறிமுகங்கள் கிடைக்கும். நீங்கள் உங்களை வளர்த்துக்கொள்ள நினைப்பீர்கள். "பெரிய கனவுகளை" காண்பீர்கள். அந்த "கனவுகளை நோக்கி" செயலாற்றி அவற்றை சாதிப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.