Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

சூத்திரர்கள் யார்?

Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
சூத்திரர்கள் ஆரியர்களா அல்லது இந்தியாவின் பூர்வீகக் குடிகளா அல்லது பரஸ்பர இனக்கலப்பில் பிறந்த குலமரபுக் குழுக்களா என்பது இங்கு நாம் எடுத்துக்கொண்ட ஆய்வுக்கு முக்கியமானதல்ல. ஆரம்ப காலத்தில் அவர்கள் ஒரு தனி வகுப்பினராக இருந்தனர். நான்காவது அல்லது கடைசிப்படி நிலையில் இருந்தனர், அதேசமயம் அவர்கள் மூன்று உயர் சாதியினரிடமிருந்து வெகுதூரம் ஒதுக்கியே வைக்கப்பட்டிருந்தனர்.

தொடக்கத்தில் அவர்கள் ஆரியர்கள் அல்ல என்ற வாதத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால்கூட ஏனைய மூன்று ஆரிய வகுப்பினருடன் அவர்கள் பரந்த அளவில் கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டு ஆரியமயமாகிவிட்டது மட்டுமன்றி, சில நிகழ்ச்சிகள் காட்டுவது போன்று. அவர்கள் தாங்கள் இழந்ததைவிடவும் அதிகம் பெற்றனர் என்பதில் சந்தேகமில்லை.

அது மட்டுமல்ல. சூத்திரர்கள் எனத் தற்போது வழங்கப்படும் சில குலமரபுக் குழுவினர் உண்மையில் பிராமணர்களும், சத்திரியர்களுமே ஆவர். சுருக்கமாகக் கூறினால். இங்கிலாந்தின் கெல்ட்டிய இனத்தவர் ஆங்கிலோ-சாக்ஸன் இனத்தவருடன் கலந்துவிட்டது போன்று இவர்களும் ஆரிய இனத்துடன் கலந்துவிட்டனர்: அவர்களுக்குத் தனித்தன்மை என்று ஏதேனும் இருந்திருக்குமானால் அதனை முற்றிலுமாக அவர்கள் இழந்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.