சிந்து முதல் வைகை வரை:Tha-Mu-E-Ka-Sa
கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு முன் ஒரு நாகரிகம், இன்றைப் போலவே சுட்டச் செங்கற்களால் கட்டடங்களை கட்டியிருக்கிறது. ஊருக்கு மத்தியில் பெரும் குளியலறை கட்டியிருக்கிறது. வீடுகளில் இருந்த நீர் வெளியேறுவதற்கான வழிகளை நகரம் முழுக்க கட்டியிருக்கிறது. பிற நாகரிகங்களுடன் வணிகம் செய்திருக்கிறது. சிந்து நாகரிகம் நமக்கு இப்படித்தான் அறிமுகமானது.
சிந்து முதல் வைகை வரையிலான தொடர்பை ஆராய்கையில் பல்வேறு சுவாரஸ்யமான பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. நீங்களும் அவற்றை ருசித்து பருகி இந்திய வரலாற்றின் அசல் சுவையை நினைவாக தேக்கி வைத்துக் கொள்ளுங்கள்..
வரலாறு என்பது மக்களின் உரிமை. கல்வியுரிமை மாதிரி வரலாற்றுரிமையும் முக்கியம். அந்த உரிமையைக் கேட்டுப் பெற வேண்டும். கோரிப் பெறவேண்டும். போராடி பெற வேண்டும். வலியுறுத்திப் பெற வேண்டும்.