பெரியார் அவர் ஏன் பெரியார்?
“நமது நிலைக்குக் காரணம் என்ன? நமது தரித்திரத்திற்கு யார் காரணம்? நமது செல்வமும், பாடும் என்ன ஆகின்றன? என்கின்ற அறிவு நமக்கு இல்லாமல் இருக்கிற முட்டாள்தனமே நமது இன்றைய இழிவுநிலைக்குக் காரணம். மதத்தையாவது, சாதியையாவது, கடவுளையாவது உண்மை என்று நம்பி அவைகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் எவனாலும் – மக்களுக்குச் சமத்துவமும் அறிவும் தொழிலும் செல்வமும் ஒருக்காலும் ஏற்படவே ஏற்படாது.”
‘குடிஅரசு’ : 14.09.1930
“என் 30 வருடப் பொதுத் தொண்டில் ஒரு செயல்கூட, ஒரு போராட்டம் கூட, நான் மறைவாய் நடத்தினது கிடையாது; நடத்த அனுமதித்ததும் கிடையாது. என்மீது பொது வாழ்வில் சுமார் 20 வழக்குகள் நடந்திருக்கும். என் சொந்த வாழ்விலும் சில வழக்குகள் நடந்திருக்கும். ஒன்றுக்குக்கூட நான் எதிர் வழக்காடியிருக்க மாட்டேன்; ஒப்புக்கொள்ளவும் தயங்கியிருக்க மாட்டேன்… நேர்மையாக நடப்பது சுயநலமும்கூட ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும், பொதுவாழ்வில் இந்த நாட்டில் நான் சாகாமலிருப்பதற்கு இந்த நேர்மையில் நான் வைத்திருக்கும் ஜாக்கிரதைதான் காரணமாகும்.”
‘விடுதலை’ : 26.07.1952
“நாம் உண்மைக்குத்தான் போராடுகிறோம் – பொய்க்குப் போராடவில்லை; பொதுநலத்துக்குத்தான் போராடுகிறோம்.”
பெரியார் திடலில் பேசிய கடைசி மாநாட்டுத்
தலைமை முடிவுரை : வே.ஆனைமுத்து நூல் : 09.12.1973.