நெஞ்சுக்கு நீதி பாகம் (1 முதல் 6)
நெஞ்சுக்கு நீதி பாகம் (1 முதல் 6)
“நெஞ்சுக்கு நீதி" பாகம் (1 முதல் 6) பலரின் வேண்டுகோளுக் கிணங்க, இதன் முதற்பாகம், நான் பிறந்த 1924ஆம் ஆண்டு முதல், 1969இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது வரையிலான 45 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை நிகழ்வுகளின் சுருக்கமாகும். 1969ஆம் ஆண்டு முதல் 1976இல் நெருக்கடி நிலையைச் சந்திக்க முற்பட்ட காலம் வரையிலான 7 ஆண்டு காலச் சம்பவங்களின் தொகுப்பே இரண்டாம் பாகமாகும். 1976 முதல் 1989 வரையிலான 13 ஆண்டுக் காலத்தில் நான் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அரசியல் பயணங்களின் சுருக்கமே மூன்றாவது பாகமாகும். 1989 முதல் 1996 வரையில் நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை நான்காம் பாகத்தில் விளக்கியிருந்தேன். நான்காம் பாகத்தின் இறுதி அத்தியாயத்தில் அதற்குப் பிறகு நடைபெற்ற முக்கிய சம்பவங்களையும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன்.