மஞ்சள் மகிமை - பேராசிரியர் தொ.பரமசிவன்
Original price
Rs. 70.00
-
Original price
Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00
-
Rs. 70.00
Current price
Rs. 70.00
மஞ்சள் மகிமை - பேராசிரியர் தொ.பரமசிவன்
பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின். இது உயிர்த்திரள்களின் காலஞ்சார்ந்த அசைவுகளின் வெளிப்பாடு. உயிர்த்திரள் என்றால் அறுகம்புல்லும், மூங்கில் தூறும், ஆலமரமும் நமக்குக் காட்டுகின்ற வெளிப்பாடுகள். புதர் என்பதன் முந்திய வடிவமான அறுகம்புல், தூறு என்பதனை வெளிக்காட்டும் மூங்கில் (பெரும்புல் வகை), விழுதுகளாக வெளியினை நிரப்பும் ஆலமரம் என்பவையே தொன்மையும் பண்பாடும் என்ன என்று நமக்கு இயற்கை உணர்த்தும் பாடங்கள். ‘ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள்.