பாரதிதாசனின் சிறு கதைகள்
மறுமலர்ச்சித் தமிழின் புத்திலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெறுவது சிறுகதைகள். வேகமாக வளரும் சமுதாய ஓட்டத்தில் மக்களின் மனதை எளிதில் பற்றுவதாக இருப்பது சிறுகதைகள்.
தமிழில் பரதியாரைச் சிறுகதை முன்னோடி என அழைத்தால் புதுமைப்பித்தன் காலத்தில் தான் அது இலக்கியத் தகுதியைப் பெற்று மனிதர்களின் மனங்களைப் பிடித்துக் கொள்ளும் தனி இலக்கிய வகையாக வளர்ந்துள்ளது.
பைந்தமிழ் இலக்கியப் படைப்பாளராக, மறுமலர்ச்சித் தமிழின் மாமனிதராக, பாரதியாரின் தாசனாக, கவிதை, காவியம், கட்டுரை, சிறுகதை, நாடகம், நாவல் எனப் பல நிலைகளில் தமிழை வளப்படுத்திய வள்ளல் . பகுத்தறிவு பார்வையாளர்.
புதுச்சேரியில் பிறந்திருந்தாலும் தமிழ்மதுக்குளத்தில் நீந்திக் களித்தவர். அவருடையப் பன்முகப் படைப்புகளில் ஒன்றாகிய சிறுகதைகள் தொகுப்புப்பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருந்தாலும் இப்போது புதிய பொலிவோடு வெளிவந்துள்ளது.