தந்தை பெரியாரின் அறிவுரை 100
பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டால் கற்பு கெட்டுப்போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கு சேர்ந்ததே ஒழிய, ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல. கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும்.'கற்பு' கெடுவதால் ஏற்பட்ட தெய்வ தண்டனையை அவர்கள் அடைவார்கள். அதற்காக மற்றொருவர் அடையப் போவதில்லை. இதுதானே மதவாதிகள், ஆஸ்திகர்கள் சித்தாந்தம். ஆதலால், பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம். பெண் அடிமை அல்ல; அவளுக்கு நாம் எஜமானர் அல்லர்; கார்டியன்கள் அல்லர் என்று எண்ணிக்கொள்ள வேண்டும். பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப் பற்றியும் காத்துக்கொள்ளத் தகுதி பெற்றுக்கொள்ள விட்டுவிடவேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். ஆதலால், பெண்களைப் படிக்க வைத்துவிட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் சேர்த்துக் காப்பாற்றக் கூடிய தன்மை வந்துவிடும்.
-தந்தை பெரியார்