பகுத்தறிவுத் தந்தை பெரியார்
பெரியார் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகளை பெரியார் சொல்வார் "பாமரனும் படிக்க வழி செய்ய வேண்டும்" என்று. அதன்படி பாமரனும் எளிய முறையில் படிக்க "பகுத்தறிவுத் தந்தை பெரியார்" என்னும் நூலினை நல்லாசிரியர் சுள்ளிப்பட்டி சு. குப்புசாமி எழுதியுள்ளார்.
நல்லாசிரியர் சு. குப்புசாமி தம்முடைய இளமைப் பருவத்தில்தந்தை பெரியாரை நேரில் பார்த்தும், அவரது சொற்பொழிவுகளைக் கேட்டும், அவர் எழுதிய சிறிய நூல்களை வாங்கிப் படித்தும் வந்துள்ளார். அதனுடைய தாக்கத்தை ஆசிரியர் எழுதிய நூல் முழுவதும் காணலாம்.
'பகுத்தறிவுத் தந்தை பெரியார்' நூலினைப்படிக்கும் போது பெரியாருடன் நெருங்கிப் பழகியது போன்று நூல் முழுவதும் தெரியவரும். அந்த அளவிற்கு எழுத்தில் ஒன்றி எழுதியுள்ளார் ஆசிரியர்.
மேலும், தந்தை பெரியாரிடன் இருந்த நகைச்சுவை மற்றும் இளமையில் நிகழ்த்திய சுவையான நிகழ்வுகளை, பட்டாடையில் பாவுபோட்டு ஜொலிப்பது போன்று மிக நேர்த்தியாக நூலில் நெய்துள்ளார்