எது மூடநம்பிக்கை
பூனையின் பாய்ச்சலுக்கும்,பல்லியின் சொல்லுக்கும்,பயந்து வாழ்வது அநேகமாகச் செத்ததற்குச் சமமே என்னும் கவிஞன் காஸி நஸ்ருல் இஸ்லாமின் கவிதை வரிகளோடு துவங்கும் இப்புத்தகம் மூடநம்பிக்கை என்பது எது?பழையதெல்லாம் மூடநம்பிக்கை என்று தூக்கிப் போடுவது முட்டாள்தனம்.புதியதெல்லாம் புத்திசாலித்தனமானது என்று முடிவுக்கு வருவதும் மூடத்தனம் என்கிற புரிதலோடு நகரும் புத்தகம் நம் மக்கள் மத்தியில் உலவுகிற அவர்களை பல சமயம் ஆட்டிப்படைக்கிற பல நம்பிக்கைகள் கருத்துகள் பழக்க வழக்கங்களை அறிவியல் பார்வையுடன் அலசி ஆராய்கிறது.சோதிடம்,நல்ல நேரம்-கெட்ட நேரம்,தோஷங்கள்,பேய் பிசாசுகள் என பல விஷயங்களை ஆராயும் புத்தகம் புதிய மூட நம்பிக்கைகளாக மக்களிடம் விதைக்கப்படும் விளம்பரங்களைக் கைவைத்து இறுதியில் எது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லையோ,எது முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக தடுக்கிறதோ,எதைக் கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக் கொள்கிறோமோ,எதைப் பரிசீலித்துப் பார்க்காமல் ஒப்புக் கொள்கிறோமோ அதெல்லம் மூடநம்பிக்கை என்கிற தெளிவுடன் முடிகிறது.கிண்டலும் நகைச்சுவை உணர்வும் ததும்பும் மொழி இப்புத்தகத்தின் சிறப்பாகும்.