Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

பெரியார் ஒரு சகாப்தம் (சீதை பதிப்பகம்)

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

இவர்தான் பெரியார்!

கல்லூரி காணாத கிழவர்! காளைப் பருவமுதல் கட்டுக்கடங்காத முரடர்! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பவேண்டும் என்று யூகமாக நடந்துகொள்ள மறுப்பவர்! யார் யாரைத் தூக்கிவிடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்! அவர் யாரைக் காணவேண்டுமோ, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர்! தமிழ் ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்! ஆரிய மதம், கடவுள் எனும் மூடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர்.

பேரறிஞர் அண்ணா 'விடுதலை வரலாறு'