
எம்.சி.ராசா: வாழ்க்கை வரலாறும் பேச்சும் எழுத்தும்
1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றவர். சட்டசபைக்கு நீதிக்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். சென்னை மாகாண சட்டமேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆதி திராவிட உறுப்பினர். 1922ல் பறையர், பஞ்சமர் என்ற வார்த்தைகளுக்குப் பதில் 'ஆதி திராவிடர் என்ற வார்த்தை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தவர். 1928ல் இலண்டன் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்தவர். ஜெ. சிவசண்முகம் பிள்ளை அவர்கள் எழுதிய இந்நூல் பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கியது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.