தமிழனை அடிமையாக்கியவை எவை? (நூல் வரிசை -1/25)
புராணங்கள் பார்ப்பனர்க்கு ஒரு நல்ல தந்திரத்தைக் கற்பித்துக் கொடுத்திருக்கிறது. எவன் எதிர்க்கிறானோ அவன் தம்பியை நீ ஆதரவாக்கிக் கொள். அவன் ஆதரவாளர்கள் நாலு பேருக்கு ஏதேனும் உதவி செய்து, உனக்கு அடிமையாக்கிக் கொள் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் இன்றும் பார்ப்பனர்கள் நன்மையடைந்து வருகிறார்கள். இராமன், இராவணனைக் கொன்றது விபீஷணன் உதவியால்; வாலியைக் கொன்றது சுக்ரீவன் உதவியால். விட்ணு இரண்யனைக் கொன்றது பிரகலாதன் உதவியால். இதெல்லாம் பார்ப்பனர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் இன்றும் நம்மவர்களான ஓட்டாண்டிகள் பலருக்கு தகரப் போணிகள்: சிலருக்கு - பதவிகள் உயர் உத்தியோகங்கள், லைசென்சு, பர்மிட்கள், தியாக மான்யங்கள் கொடுத்து நம் மீது உசுப்படுத்தி விட்டிருக்கிறார்கள். பணம், பதவி என்றால் மானங்கெட்ட மக்களுக்கு ஆசை ஊறத்தானே செய்யும்? சுலபத்தில் அந்நியருக்கு அடிமைகளாகிவிடுகிறார்கள். அதனாலேயே ஆரியம் இன்னும் இந்நாட்டில் கொட்டம் அடிக்கிறது.
-தந்தை பெரியார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.