ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி (நாவல்)
ஆசிரியர் குறிப்பு:
என்.கே.ரகுநாதன் 1991 ஆம் ஆண்டில், யாழ் மண்ணில் பிறந்தவர். பிறகு பத்தாண்டுகள் கொழும்பு தங்கியிருந்த வேளையிலும் பின்னர் அங்கிருந்து கனடாவில் குடிபுகுந்தர். மித அண்மையக் காலமாய் ‘தமிழ் கூறும் நல்லுலகின் சிங்கங்காள்’ களால் புலிகளால், இன்னபிறர்களால் ‘தொப்புள் கொடி’ உறவு என மிக உன்னதமாய் விதந்தோதப்படுகிற ஈழத் தமிழ் சமூகத்தின் சாதிய வன்மத்தை, அதன் இந்து – இந்திய கிராமச் சமூகத்தின் நகலெடுப்பாய் இருக்கும் பார்ப்பனியக் கட்டமைப்பை மிக அடிப்படையான எளிய மனிதர்களின் புரிதலிலும் உளவியலிலும் நின்று வெளிப்படுத்திக் கொள்கிறது இப்புதினம். ஒரு சிறிய கிராமம். பனைமரம்தான் அதன் இயற்கை வளம். அங்குள்ளவர்கள் அம் மரத்தையே நம்பிக் காலத்தைக் கடத்துகிறார்கள். அவர்களில் இருவர் கால்களை நகர்த்தி வேறு ஊர்களுக்குப் போய் அங்கு கள் இறக்கிப் பிழைக்கத் தொடங்கினார்கள். அந்த ஊர்களின் முன்னேற்றம் அவர்களின் மனதில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்த, தங்கள் பிள்ளைகள் இருவரைப் படிப்பிக்கிறார்கள். பல கஷ்ட துன்பங்களுக்கிடையே அவர்களும் ஆர்வத்துடன் படித்து ஆசிரயர்களாகிறார்கள். அடக்கு முறைகளுக்கெதிரான எழுச்சிகளோடு மட்டும் நின்று விடாமல். தமது பிள்ளைகள் கல்வித் துறையிலும் முன்னேற்றம் பெறச் செய்து அகலக்கால் பதித்தார்கள். இந்த வரலாறுதான், ஒரு ‘பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ யாகும்.