புரிந்துகொள்வீர் - புராணங்களை, வேதங்களை
காலத்தால் பறிமுதல் செய்ய முடியாதவை
பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையன் அவர்கள் நமது இயக்கத்தின் லட்சியங்களில் மிகவும் தோய்ந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்.
அரசுப் பணியான கல்வித் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், தமது வாழ்வை தொண்டறத்திற்கே செலவிட்டவர்.
எமது பணியில் பெரிதும் உதவிட்ட ஓர் அற்புதமான எழுத்தாளர் - பேச்சாளர். சிந்தனையாளர்! ஏராளம் படித்து, அவைகளைக் குறிப்பெடுத்து வைத்து, ஆதாரங்களை அடுக்கிப் பேசும், எழுதும் ஆற்றல்மிகு அறிஞர் அவர். மரணம் மனிதர்களைத்தான் சமுதாயத்திலிருந்து பறித்துக் கொள்ளுமே தவிர. அவர்தம் அரிய சிந்தனைகளையும். அறிவார்ந்த, காலத்தால் கவர முடியாத செயல்பாடுகளையும் பறிமுதல் செய்யாது: செய்யவும் முடியாது.
அதற்கு ஓர் சான்று தான் இந்த அருமையான கட்டுரைத் தொகுப்புகள்.
- கி.வீரமணி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.