நோயற்ற வாழ்வுக்கு...
வாழ்வியல் துளிகள்
சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக் கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்!
தூக்கக் குறைவுக்கு ஆளானவர்கள் எந்தப் பணியையும் செயலையும் மெதுவாகவும். இழுத்து இழுத்தும்தான் செய்கிறார்கள். சரியாகத் தூங்கி விழித்தவர்களோ. எந்தப் பணியையும் சுறுசுறுப்புடன் முடித்துவிடுகிறார்கள்.
ஒருவருடைய வேலை. மூளை சம்பந்தப்பட்டது என்றால். அவர் இளைப்பாற உடனடியாகச் செய்யவேண்டியது அந்த மூளை வேலையைச் சற்று நிறுத்திவிட்டு. பேசாமல் இருப்பது. எந்த வேலையும் செய்யாமல் இருப்பது, எதைப்பற்றியும் சிந்திக்காமல் அமைதியாக இருப்பது நல்ல இளைப்பாறுதலைக் கொடுக்கும்!