Skip to content
Free Shipping on Orders over Rs.1000 Test
Free Shipping on Orders over Rs.1000

Language

நாடார் வரலாறு கறுப்பா...? காவியா...?

Sold out
Original price Rs. 140.00 - Original price Rs. 140.00
Original price
Rs. 140.00
Rs. 140.00 - Rs. 140.00
Current price Rs. 140.00

நூல் விமர்சனம்

தி.லஜபதிராயின் இந்நூலானது ஒரு தடைக்குப் பின்னால் வெளிவந்திருக்கிறது. தடையே இந்நூல் உடனுக்குடன் (மார்ச் 7, 219, மார்ச் 9, 219) இரண்டு பதிப்புகளைக் காணவைத்துவிட்டது. நூல்களைத் தடைசெய்வது, நூல் ஆசிரியர்களை மிரட்டுவது, தாக்குவது இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. 6.3.219-ஆம் நாள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் இந்நூலை வெளியிட உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் மறுத்துவிட்டார். இந்நூல் வெளியீட்டு விழாவை அரசுக்கு எதிரான ஒரு விழாவாகவும், அவ்விழாவில் கலந்துகொண்டு பேசுவோர் அரசு எதிர்ப்பாளா்கள் என்றும், இதனை சாதி, மதப் பிரச்சனையை ஏற்படுத்துகிற விழாவாகவும் கருதி உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் மறுத்தது என்பது தனிப்பட்ட இயக்குநரின் முடிவல்ல. அ.தி.மு.க என்கிற அறிவிக்கப்படாத (அனைவராலும் நன்கு உணரப்பட்ட) பாரதிய சனாதாவின் முடிவு. உலகத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட தமிழ் வளர்ச்சித்துறையே இந்துமத வளர்ச்சித் துறையாக உருமாறி உள்ளது. செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனப் பொறுப்புகளில் நாகசாமி போன்ற பார்ப்பனர்கள் (வலதுசாரி தமிழியல் அறிஞா்கள்) நியமனம் செய்யப்படுகின்றனர்.

உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ்வளர்ச்சித் துறையின்கீழ் இயங்குகிறது. இத்துறையின் தமிழ் வளாச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சா் மாஃபா. (பிரெஞ்சில் மக்கள்திறம்) பாண்டியராஜன். இவர் அதிமுக உறுப்பினா் என்றாலும் சிந்தனையில் ஆர்.எஸ்.எஸ் காரா். உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறப்போகிற நாடார் வரலாறு நூல் இவரின் பார்வைக்கு போனதால் இந்நூலுக்கானத் தடை முடுக்கிவிடப்பட்டிருக்கும். இன்றைய உலகத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை போன்றவகளின் இயக்குநர்கள் இந்துமத உணா்வும் சாதியப் பற்றும் ஒருங்கே உடையவர்கள். ஜெயலலிதா இறந்த முப்பதாம்நாள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநர் விசயராகவன் “யாகம்” வளர்த்தார். பழ.நெடுமாறன், தமிழிசை உட்பட பலரும் அந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

அண்மை நாட்களில் பல நிகழ்வுகள் இந்திய தமிழகச் சூழலில் நடைபெற்றுவருகின்றன. இது மத்திய பாஜக ஆட்சியின் தோன்றாத்துறையோடு அதிமுக அடிமை அரசின் முன்னெடுப்பாகத் தமிழகத்தில் நடந்துவருகிறது. திருச்சி ஜோசப் கல்லூரியில் நடைபெற இருந்த ‘தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்’ என்னும் கருத்தரங்கை நிறுத்தினா. இந்துமதவெறியாகள், தமிழ் இலக்கியத்தில் பல வகை இலக்கியங்கள் இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட காப்பியமான கம்பராமாயணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் வாழ்வியல் தத்துவங்களை எல்லாம் தவறான வரலாறாக இக்கருத்தரங்கு சித்திக்கிறது, இலக்கியத்தில் எழுத்துப் பயங்கரவாதத்தைக் கல்லூரிநிர்வாகம் செய்கிறது. இது மதமோதலை ஏற்படுத்தும் என இந்துமக்கள் கட்சி ரவிக்குமார் கண்டனம் செய்யவும் எச்.ராஜா டுவிட்டரிலும் பதிவு செய்தனர். இப்பதிவைக்காட்டித் தமிழ்வளர்ச்சிப் பண்பாட்டு அமைச்சரான மாஃபா. பாண்டியராஜனும் கண்டித்தார்; கருத்தரங்கம் தடைசெய்யப்பட்டது. இதைப்போல் சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சி, இந்துத்துவ அமைப்புகளால் கடும் எதிர்ப்புக்குள்ளாயிற்று. தபோல்கா், பன்சாரே, கல்புர்கி போன்ற முற்போக்கு எழுத்தாளர்கள் மூடத்தனத்திற்கு எதிராகப் போராடிவந்ததற்காகவும் இதழியலாளர் கவுரிலங்கேஷ் இந்துத்துவத்திற்கு எதிராகத் தீவிரமாக அறிவுத்துறையில் செயல்பட்டதற்காவும் படுகொலை செய்யப்பட்டது நாடறிந்ததே.

இந்து – கவுண்டர் சாதிய வெறியர்களால் தாக்கப்பட்ட படைப்பாளிகளான பெருமாள் முருகன், புலியூர் முருகேசன், இந்து அடிப்படைவாதிகளின் கொலைப்பட்டியலில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துரை. ரவிக்குமார் எனத் தமிழகமும் இந்துத்துவத்தின் கொலைவெறி அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவருகிறது. பகுத்தறிவு பகலவன் சுயமரியாதைப் போராளி தந்தை பெரியாரின் சிலைகள் உடைக்கப்படுகின்றன; இழிவு செய்யப்படுகின்றன. இணைநோ்வாக தமிழ்த் தேசியத்தை முன்வைக்கும் பெ.மணியரசன், சீமானின் பெரியாரிய எதிர்ப்பையும் தமிழகம் கண்டுவருகிறது.

நாடார் வரலாறு: கறுப்பா…? காவியா… ? (மார்ச் 9, 219, இரண்டாம் பதிப்பு) இந்த வரலாற்றுச் சூழலில் உருவான சிறப்பான நூலாகும். நூலின் ஆசிரியர் வழக்கறிஞா் என்பதால் நல்ல தர்க்க முறையிலான உரையாடல் இந்நூலில் அமைந்துள்ளது. 14- பக்கங்களைக் கொண்டு 16- வகையாகத் தலைப்பைப் பிரித்து இந்நூலை அமைத்துள்ளார் ஆசிரியர். 7 -பின்னிணைப்புகளைத் தந்து நூலுக்கு வலிமைச் சோ்த்துள்ளார் நூலாசிரியா் அவர்கள்.

இந்நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே, மாறாக குலத்தாழ்ச்சி உயா்ச்சி சொல்வதன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் இஸ்லாமிய – கிறிஸ்தவ சமூகத்தினருடன், பட்டியல் இன விளிம்புநிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் எண்ணவோட்டத்தில், இந்து வலதுசாரிச்சிந்தனை மிகுதியாக இருப்பதை சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் காணமுடிகிறது. இந்நிலையில் கடந்த 2 – ஆண்டுகால வரலாற்றை திரும்பி பார்ப்பது மிகவும் அவசியமாகிறது. (ப.8)

என்று நூலைத் தொடங்குகிறார். நாடார் சமூகம் இந்துமதத்தால் பல இன்னல்களைத் தாண்டி வளர்ந்த சமூகமாக உள்ளபோதிலும் அது தனது கடந்தகால வரலாற்றை மறைக்கிறது. சாதியமயமாகி வருகிறது என்கிற ஆதங்கத்தில் இப்படி எழுதத் தொடங்குகிறார். நூலின் தொடக்கத்திலேயே நாடார் சமூகத்தில் பிறந்து வணிகத்தில் அரசப் பதவிகளில், எழுத்துத் துறையில் உயா்ந்து புகழடைந்தவர்களின் புகைப்படங்களையே வெளிப்படையாக வெளியிட்டு இவ்வுயா்வுக்கும் புகழுக்கும் யார் காரணம் என்பதாகப் பதிவுசெய்கிறார். ஒரு சமூகம் தான் கடந்த வந்த பாதையை மறுக்க இயலாது என்பதை நினைவூட்டுகிறார் லஜபதி.

ஆவணங்களில், ஆராய்ச்சி நூல்களில் நாடார்கள்:

199 – ஆம் ஆண்டு வெளியான எட்கா் தர்ஸ்டன் மற்றும் கே. ரங்காச்சாரிஎழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும், திருவிதாங்கூரில் கிறிஸ்துவம் எனும் ஜி.டி. மெக்கன்ஸியின் (G.T. Mackenzie) குறிப்புகள், பிஷப் கால்டுவெல்லின் “திருநெல்வேலி சாணார்கள்”, 1871 – ஆம் ஆண்டு, தர்மபூமி என்னும் நூலை எழுதிய சாமுவெல்மட்டீரின் மேற்கோள்கள், ஜெ.சார்கின் பதிவுகள் என நாடார்கள் பற்றிய ஆய்வுகள் வழி நாடார் இனமக்களை அடையாளப்படுத்த முயல்கிறார் நூலாசிரியா்.

எட்கா் தர்ஸ்டன் பதிவுகளில் நாடார் என்ற சாதிக் குறிப்புகள் இல்லை. 1899-ஆம் ஆண்டு நிகழ்ந்த நெல்லை கலகங்கள் மூலம் அறியப்பட்ட மாபெரும் கள் இறக்கும் சாதியாக சாணான் என்ற பெயரே சுட்டப்பட்டுள்ளது.

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி, திருவிதாங்கூர் அரசாட்சி, கிறிஸ்தவத்திற்கு மாறிய நாடார் பெண்கள் மேலாடை அணிந்தது. அதனால் மூண்ட கலவரம். 1859-இல் Charles travelyan என்ற பெயருடைய மெட்ராஸ் கவர்னர், நாடார் (ம) தீண்டத்தகாத பெண்கள் மேலாடை அணிய உத்தரவு இட்டது.

1874-ஆம் ஆண்டு நாடார்களின் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவு தோல்வி, நாடார்கள் தங்களை சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வாரிசாகவும் சத்ரிய குலத்தவர்களாகவும் அறிவித்துக் கொள்ளுதல், சொத்து ஆவணங்களில் கூட சத்ரியா் எனப்பதிவு செய்தல். கல்விக்கூடங்களை ‘சத்ரியா் பாடசாலை’ எனக் குறிப்பிடுதல், பார்ப்பன புரோகிதர்களை நியமித்துக்கொள்ளுதல், தங்களுக்குள் ‘ கோத்திரம்’ இருப்பதாகச் சொல்லுதல் என்பதாக நாடார்கள் தங்களது சொந்த சாதியை மேனிலையாக்கப் (Sanskritization) படுத்திக்கொண்டனர்.

சாணார்கள் கிறித்துவ மதமாற்றத்தைச் சந்தித்தது பார்ப்பனிய; வெள்ளாள ஒடுக்குமுறையால் தான், வசதி படைத்த சாணார் சிலா் பார்ப்பனிய பண்பாட்டுக் கூறுகளோடு செயல்பட்டனர். இதை ராபர்ட் கால்டுவெல் கணித்திருந்தார். ஆனால் நாடார் சாணார், கிராமணி பெயரீடுகளுக்கான காரணங்கள் உறுதிப்படுத்த முடியவில்லை. இப்படியாகப் பல குறிப்புகளை லஜபதி முன்வைத்துப் பேசுகிறார். நாடார் பற்றிய ஆய்வுகளைப் பயன்படுத்தினாலும் அக்குறிப்புகளிலிருந்து நாடார், சாணார், கிராமணி என்கிற சொல்லுக்கான வரையறை சரியாக உருவாகவில்லை என்றே ஆசிரியர் கூறுகிறார். தொகுத்துரைப்பதெனில், நாடார், சாணார் சமூகம் பல படித்தரமான அடையாளங்களைக் கொண்டுள்ளது என்பதே எனது பார்வை.

கமுதி கோயில் வழக்கின் தீர்ப்பும் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்குச் செல்லுதலும்:

ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட ஜமீன் காலத்திலேயே (1855 நவம்பர்) நாடார்கள் இராமநாதபுரம், கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வழிபாட்டு உரிமை வேண்டி கோயிலின் பரம்பரை அறங்காவலரான பாஸ்கர சேதுபதியிடம் முறையிட்டும் அவர் அதை நிராகரித்தார். 1897, மே மாதம் 14 ஆம் தேதி கமுதி கோயிலுக்குள் நாடார்கள் நுழைந்தனர். சேதுபதி கோயில் தீட்டுப்பட்டுவிட்டது என்று பார்ப்பன புரோகிதர்களை வைத்து மகாசம்ப்ரோசனம் சடங்கு செய்ய ரூ. 25 கேட்டு வழக்குத் தொடா்ந்தார்கள். 2.7.1899இல் மதுரை கிழக்கு சார்பு நீதிமன்றம் நாடார்கள் கோயிலுக்குள் நுழைய தடைவிதித்தும் கோயிலைத் தூய்மைப்படுத்த 5ம் எனவும் தீர்ப்பு வழங்கியது.

அதே சமயம் இரு தரப்பினரும் ஒத்திசைவுடன் முடிவுஎடுத்து நாடார்களைக் கோயிலுக்குள் அனுமதிக்க ரூ.3 பெற்றுக்கொண்டு அனுமதியளிக்க, பாஸ்கரசேதுபதி முன்பணமாக ரூ.5 வாங்கிக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தஞ்சை பொறையாரைச் சார்ந்த செல்வந்தர் இரத்தினசாமி நாடார் இதில் முன்முயற்சி எடுத்தார். ஆனால் மேல்முறையீட்டில் சட்ட ஒழுங்கு சிக்கல் வரும் என எண்ணிய மதுரை மாவட்ட ஆட்சியா் சேதுபதிக்கு அறிவுறுத்த அவர் ஒப்பந்தத்தை ரத்து செய்தார். கமுதி ஆலயத்தின் எந்தப் பகுதியிலும் நாடார்கள் நுழைய முடியவில்லை. இது போலவே திருச்சுழி கோயில் நுழைவுச் சிக்கலும் (11.8.189) அமைந்தது. நாடார்களின் கோயில் நுழைவைத் தடுத்து வந்த பாஸ்கர சேதுபதி அவர் காலத்தில் இந்துமதப் பெருமைகளை வெளிநாடுகளில் பேசப்போன விவேகானந்தருக்கு நிதி உதவி செய்தார் என்பதை இணைநோ்வாகக்காணவேண்டும். இதுதான் இந்து மதத்தின் கடந்தகால நிலை.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் (2.7.1899) நாடார் கோயில் நுழைவுத் தொடா்பான வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் தான் அமைந்தது. (மது தயாரிக்கும் சாதி கோயிலுக்குள் போனால் தீட்டு கழிக்கனும், பிறர் கோயிலில் நுழைந்தால் ஆன்மீகப் பலனில்லையாம்) சேதுபதி தொடுத்த வழக்கில் பசும்பொன் முத்துராமலிங்கனாரின் பாட்டனார் வௌ்ளைச்சாமிக்கு இந்த நிகழ்வுகளில் பங்கு இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்துமத சாஸ்திரங்களைக் குறிப்பிட்டு நாடார் இனமக்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய நீதிபதி வரதராவ், பழந்தமிழ் இலக்கியங்களை மீட்டதாகக் கொண்டாடப்படும் உ.வே.சாமிநாத ஐயரைஇந்துமத சாஸ்திரங்களின் நம்பகத் தன்மைக்கும், புனிதத் தகுதிக்கும் சான்றாக நிறுத்துகிறார். இது குறித்து விரிவாகக் காணலாம்.

மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா. (அ.ப. நடராசன், உடுமலை)

பழைய மரபு

அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும், நாடார் என்னும் ஜாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது.

இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்த கிராமம் கமுதி. அங்கே மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. நாடார்கள் அந்தக் கோவிலுக்குள் புகுந்தார்கள். மற்றவர்கள் அதைத் தடுத்தார்கள். இதனால் ஒரு கலகமே உண்டாயிற்று.

தம்முடைய ஜமீனைச் சேர்ந்த கிராமம் ஆகையால், பழைய மரபை மாற்றக் கூடாது என்கிற எண்ணத்தைக் கொண்ட அரசர், அவ்வாறு கோவிலுக்குள் புகுந்த நாடார்கள் மீது ஒரு வழக்கு போட்டார். பல காலமாக இருந்துவந்த பழக்கத்தை மாற்றுவதால் தமக்குப் பழி வரலாம் என்கிற எண்ணத்தில் அவ்வாறு செய்தார். அவருக்கே பல நாடார்கள் நண்பர்களாய் இருந்தார்கள். என்றாலும் நட்பை உத்தேசித்து மரபை மாற்றக்கூடாது என்கிற உறுதியான எண்ணம் உடையவராக இருந்ததால் அந்த வழக்கைப் போட்டார்.

மதுரை சப்-கோட்டில் விசாரணை நடந்த்து. டி.வரதராவ் என்பவர் அப்போது சப்-ஜட்சாக அங்கே இருந்தார். ஆசிரியப் பெருமானை அங்கே வந்து சாட்சி சொல்ல வேண்டுமென்று சொன்னார்கள். மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களே ”நீங்கள் வந்து சாட்சி சொன்னால் எனக்கு மிகவும் பலமாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார்.

ஆசிரியப் பெருமான் (உ.வே.சா) அப்படியே போய், சாட்சி சொன்னார். நாடார்களைப் பற்றி இழிவாகக் கூறாமல் அவர்களில் எத்தனையோ பக்தர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி, ஆனாலும் மரபு பிறழக்கூடாது என்று வற்புறுத்தினார். அதன் பிறகு சப்-ஜட்ஜ் தீர்ப்புக் கூறினார். அந்தத் தீர்ப்பில் ஆசிரியரைப் பற்றிச் சிறப்பாக அந்த நீதிபதி சொல்லியிருந்தார்.

இந்தச் சாட்சியை அளித்தவர் கும்பகோணம் கல்லூரி தமிழ் ஆசிரியராக இருக்கிறவர். தமிழில் உள்ள பழைய நூல்கள் பலவற்றை ஆராய்ந்து பதிப்பித்துக் கொண்டிருக்கிறவர். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி ஆகியவற்றைப் பதிப்பித்திருக்கிறார். அந்நூல்களுக்கு உரையும் எழுதியிருக்கிறார். டாக்டர் போப் துரை முதலியவர்கள் அவருடைய புலமைத் திறத்தையும், அவரது பெருமையையும் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய சாட்சி இந்த வழக்குக்கு மிகவும் தகுதியானதாய் இருக்கிறது. அவர் நடுநிலைமை பிறழாமல் உண்மையை உணர்ந்து சொல்கிறார். ஆகையால் அவருடைய சாட்சி மிகவும் கவனத்திற்குரியதாய் இருந்தது. இத்தகைய சிக்கலான விஷயங்களில் அத்தகைய பெரியவர் சாட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்த்து என்று விரிவாக எழுதினார்.

ஆதாரம். என் சரித்திரம் உ.வே.சா தன் ஆசிரியர் பற்றி கி.வா. ஜகந்நாதன், பக்கம்.793-794

இப்படியான கோயில் நுழைவு உரிமைப் போராட்டங்களில் தங்களுக்கான உரிமை மறுக்கப்பட்டதால் சுயமரியாதை இழந்த நாடார் மக்கள் பெரியார் ஈ.வெ.ராவின் இயக்கத்தில் இணைந்தனர் என்கிறார் லஜபதியார். கமுதி நுழைவுப் போராட்டத் தடைக்குப்பின் சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகே நாடார்களின் ஆலய நுழைவு உரிமை கைவரப் பெற்றது. அப்படி கைவரப்பெற்ற அப்போராட்டம் 8.7.1939இல் நடந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் தலைமை வைத்தியநாத அய்யா் கோயில் நிர்வாகி ஆர்.எஸ்.நாயிடுவின் ஆதரவு என அரசின் ஆதரவோடு இப்போராட்டம் நடந்தது என்பார்