அறிவுப் பேரொளி அண்ணா
அண்ணா அவர்கள், தாம் மட்டும் எழுத்துத் துறையை மேன்மையடையாது பல சிறந்த எழுத்தாளர்களையும், பேச்சாளர் களையும் தமிழகத்திற்குத் தந்தார் என்று உண்மையில் பெருமையுடன் கூறலாம். கலைத் துறையிலும் அண்ணா வழியில் முன்னேறியவர்கள் பலராவர்.
அண்ணா அவர்கள் நாடகத்தில் புதுமைகளைப் புகுத்தியே சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தியும் எழுதி வர புராண நாடகங்களை நடத்தி வந்தவர்கள் சமூக நாடகங்கனை நடத்திட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக நாடகங்களை நடத்தி நாட்டின் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தித் தமிழகத்தை எழுச்சி பெறச் செய்தார்கள் என்றால் இதற்கு அண்ணா அவர்கள் முன்னோடியாக இருந்தார் என்று பெருமையுடன் கூறலாம்.
நாடகங்கள் மூலம் கிடைத்த நிதி கொண்டு பல கல்வி நிறுவனங்கள் சீர்பட்டன. நாடகத்தின் மூலம் கிடைத்து கொண்டு தான் “அறிவகம்” கட்டி முடிக்கப்பட்டது.
நாடகங்கள் மூலம் வந்த நிதி, இயக்கத்தின் தேர்தல் செலவுகளுக்கும் உதவியது. நலிவடைந்த தொண்டர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக நிதியளிக்கவும் பல நாடகங்கள் நடத்தப்பட்ட அவர்களுக்கு உதவிட, அண்ணா முன் வந்தார்.