பயணம்
சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது.
இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது.
இந்தத் தொகுப்பில் உலகப் புகழ்பெற்ற ஆறு சர்வதேச எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தச் சிறுகதைகள் அனைத்துமே உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட எழுத்தாளர்களின் சுய அனுபவங்களாகும். இந்தச் சிறுகதைகளை எழுதியதற்காக இந்த எழுத்தாளர்கள் அனைவருமே அதிகாரத்தின் தண்டனைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எழுத்தாளர் ஈ.பி. டொங்காலா எழுதிய 'மனிதன்' எனும் சிறுகதை அவரை, தான் பிறந்த தேசத்திலிருந்து நாடு கடத்தச் செய்தது. எழுத்தாளர் ஐஸாக் பாபெல் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். மன்னராட்சியின் மக்கள் மீதான அலட்சியத்தைத் தனது எழுத்துகள் மூலம் எடுத்துச் சொன்ன எழுத்தாளர் பாம் டை தூன் தனது நாற்பத்து மூன்றாம் வயதில் கொல்லப்பட்டிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புகளை எழுதிய எழுத்தாளர் ஹஸான் கனஃபானீ தனது முப்பத்தாறு வயதில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இவ்வாறாக சர்வாதிகாரத்தைத் தனது எழுத்துகளின் மூலமாக எதிர்த்ததால், படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கு ஒரு தொகுப்பாக உருவெடுத்திருக்கிறது. இந்த 'பயணம்' எனும் தொகுப்பு, மக்களுக்காக தமது 'பயணத்தை' முன்னெடுத்த வீரர்களின் கதைகளைக் கொண்டிருக்கிறது.