வாழ்க திராவிடம்
வாழ்க திராவிடம்
“திராவிடநாடு திராவிடருக்கே" என்பதே ஒவ்வொரு திராவிடருடைய உரிமைகொண்ட இருதய முழக்கமாக இருக்க வேண்டும். இல்லையேல் நான்கரை கோடி திராவிடர்களுடைய பண்டைய புகழும், பண்பும், நாகரிகமும், கலையும், அடியோடு அழிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, மறைக்கப்பட்டுவிடும். ஆகவே, “நம் உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை திராவிடம் நமது நாடு எனும் உரிமைப் பேரொலியை விண்ணதிர நாடெங்கும் முழக்கம் செய்யவேண்டும்” என்று திராவிடத்தின் தனிப் பெருந் தலைவர் பெரியார் அவர்கள் 1938இல் போர் முரசு கொட்டினார்கள். அந்த முழக்கத்தின் எதிரொலி பல்லாயிரக்கணக்கான திராவிட இளைஞர்களுடைய உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்ததோடு மட்டுமன்றி, இன உணர்ச்சியை வளர்த்து, “அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு” என்று தோள்தட்டி திக்கெட்டும் ஆர்ப்பரிக்கச் செய்துள்ளது. இதுசமயம் “தமிழ்நாடு தமிழருக்கே” எனும் முழக்கம் சில மேடைகளில் ஒலிக்கப்படுவதுடன்; பிராமணர்களும் தமிழர்கள் தானென்றும், தமிழ் நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும், இசைக்கும், கலைக்கும், தொண்டு புரிந்தவர்களென்றும், பேசிவரும் சில ஆரியதாசர்களும் திருந்தும் வகையில், இதன் ஆசிரியர் திரு க.அன்பழகன் எம்.ஏ., அவர்கள், தக்க விளக்கந் தந்துள்ளார். இன்னும், சிந்தனையைத் தூண்டும் உயரிய கருத்துக்களுடனும், தக்கச் சான்றுகளுடனும் அவருக்கே உரியதான நடையில், தெளிவுபட - அழகுபடத் தீட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர்க்கு எமது நன்றி
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.