சர் ஏ.டி.பன்னீர் செல்வம் (நூல் வரிசை -5/5)
"என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்தபோதும் இயற்கைதானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழ வில்லையே என்று கருதலாமா? இது பேராசையல்லவா என்று கருதினேன். பத்து வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணனின் மகன் படித்து விட்டு இந்தியா வந்து சேர்ந்து, சரியாக இருபதாவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை. கதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டுகின்றது. தமிழர்களைக் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந்தோறும் நெஞ்சம் பகீரென்கின்றது.
காரணம் முன் சொல்லப்பட்ட மனைவி, தாயார். குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்டச் சுகதுக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்துபோகும். பன்னீர் செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது. எனவே தமிழர்களைக் காணுந்தோறும் நினைக்குந்தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்திற்கு வருகின்றார்.'
- தந்தை பெரியார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.