Skip to content

சிதம்பரம் நடராஜர் கோயில் தனித்த மத உட்பிரிவுக் கோயிலா?

Save 15% Save 15%
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 51.00
Rs. 51.00 - Rs. 51.00
Current price Rs. 51.00
• ஒரு மத உட்பிரிவினர் தாமே ஒரு கோயிலை கட்டி அதனைப் பராமரித்தும் வந்தால் மட்டுமே அக்கோயில் ஒரு மத உட்பிரிவுக் கோயில் எனக் கருதப்படும். இந்திய அரசமைப்புச் சட்டம் இவ்வாறுதான் மத உட்பிரிவு உரிமை பற்றி கூறுகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களால் கட்டப்பட்டது அல்ல. எனவே தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மத உட்பிரிவு உரிமை கோர முடியாது.

• தீட்சிதர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். ஸ்மார்த்த மதத்தில் உருவ வழிபாடு இல்லை. சிதம்பரம் நடராஜர் கோயிலில் வேத முறைப்படியான பூஜை செய்வதாக தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் சைவ மத கோயில். அதில் வேத முறைப்படி பூஜை செய்வது ஆகமத்துக்கு எதிரானது. சைவ ஆகமப்படிதான் பூஜைகள் நடைபெற வேண்டும்.

1890 மற்றும் 1939 ஆண்டுகளிலேயே சென்னை உயர்நீதிமன்றம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு பொதுக்கோயில் எனவும் தீட்சிதர்களது சொந்தக் கோயில் அல்ல எனவும் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்பினால் அது ஒரு மத உட்பிரிவுக் கோயில் அல்ல என்பது உறுதியாகிறது.

• தீர்ப்பு சொல்லப்பட்ட சர்ச்சை (res judicata) மீண்டும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்பது சட்ட விதி ஆகும். அதற்குப் புறம்பாக தீட்சிதர்கள் தாங்கள் 'ஒரு மத உட்பிரிவினர்' என்ற தீர்ப்பினை நீதிமன்றத்தில் பெற்றிருப்பினும் அதனடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 'மத உட்பிரிவு கோயில்' என்ற உரிமை கோர முடியாது. சிதம்பரம் கோயில் ஒரு பொதுக்கோயில் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையிலும் தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கிலும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு மத உட்பிரிவுக் கோயில் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை.

• சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு சைவ மத பொதுக்கோயில் சைவ மதக் கோயில்களில் சைவ ஆகமங்களின் படியே பூஜைகள் நடைபெற வேண்டும். வேத முறை பூஜைகள் ஆகம பூஜைகள் அல்ல. தீட்சிதர்கள் ஸ்மார்த்த மதத்தினர். சைவ மதத்தினர் அல்லர். நீதிமன்ற தீர்ப்பும் அவர்கள் ஸ்மார்த்த மதத்தில் ஒரு உட்பிரிவினர் என்பதே. உச்சநீதிமன்ற தீர்ப்புகளின்படி, சைவ ஆகம பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் மட்டுமே அந்தப் பொதுக் கோயிலில் பூஜை செய்யக்கூடும். தீட்சிதர்களின் வேதமுறை பூஜை ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதால் அது ஆகம மீறல் ஆகும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஆகமங்கள் மீறப்படக்கூடாது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.