மாமனிதர் அண்ணா
ஒரு படைவீரன் தன் தலைவனின் ஆற்றலைப் போற்றிப் புகழ்வதைப் போல, ஒரு மெய்யியல் அறிஞன் தன் ஆசானின் கோட்பாடுகளைத் தன்னைச் சார்ந்தவர்களுக்கு எடுத்துக் கூறுவதைப்போல, ஒரு கருத்துள்ள குடும்பத் தலைவன் தன் முன்னோர்கள் தேடிய சொத்துக்களைத் தன் மக்களிடம் பொறுப்புடன் ஒப்படைப்பதைப் போல, ஒரு பாணன் தனக்குக் கொடை கொடுத்த வள்ளலின் பெருமைகளைத் தன்னைப் போன்ற பாணர்களுக்குக் கூறி ஆற்றுப்படுத்துவதைப் போல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள், தாம் தம் உணர்வில் பதிந்த தலைவராம் அறிஞர் அண்ணாவின் அருந்திறல் வாய்ந்த பெருமைகளையும், அவர் வடித்தெடுத்த கோட்பாடுகளையும், மேற்கொண்ட வாழ்க்கை நெறிகளையும் இளைய தலைமுறையினர்க்கு எடுத்துச்சொல்லி, அந்த மாமனிதரின் குறிக்கோளையும், அவர் உருவாக்கிய இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வை வற்புறுத்தும் ஓர் அரிய ஆவணமாக இத்தொகுப்பை வழங்கியுள்ளார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.