கலிங்கராணி
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
அமுதூறும் அழகு தமிழில் சுவையூறும் சொல்லு திர்த்து அரசியல் உலகிலும் இலக்கிய உலகிலும் புகழ்க் கோபுரமாய் நிற்பவர் பேரறிஞர் அண்ணா . இந்நாட்டில் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் புரட்சி கண்ட அவர், இலக்கிய உலகிற்கும் படைத்தளித்த செல்வங்கள் பல உள். புதினம், சிறுகதை, நாடகம், மடல், கட்டுரை, இதழுரை என்ற வடிவங்களில் எண்ணிக்கையில் இரண்டாயிரத்தைத் தாண்டி நிற்கின்றன; எண்ணத்தால் எக்காலத்தையும் தாண்டி நிற்கின்றன அவரது படைப்புகள். அவற்றுள் ஒன்றே குலோத்துங்கச் சோழனின் கலிங்கப் போரினைப் பின் னணியாகக் கொண்டு புதின வடிவில் பிறந்த கலிங்கராணி. பிறந்தோர் எல்லாம் பெயரோடு வாழ்வதில்லை; வாழ்ந்தாலும் மடிந்தபின் மற்றோர் நினைப்ப வாழ்ந்த தில்லை. இலக்கியங்களுக்கும் இந்நியதி பொருந்தும். புற்றீசலாய்ப் புதினங்கள் தோன்றிய நாளில், அண்ணாவின் புதினப் படைப்புகள் இருள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒளி வீசிய இளஞ் ஞாயிற்றுக் கதிர்கள். அண்டம் உள் ள ள வும் ஆதவன் உலவுவது போல, அவரது படைப்புகள் இளைய தலைமுறைகளின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றியும், அவ்வெதிர் காலத்திற்கு இடையூராய் அமைகின்ற நிகழ்காலத்தைப் பற்றியும், இந்நிகழ்காலச் சீரழிவுக்கு அடிகோலிய இறந்த காலத்தைப் பற்றியும் இயம்பிய வண்ணம் இருப்பன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.