கலைஞர் 100 காவியத் துளிகள்
'இடுக்கண் வருங்கால் நகுக' என்றார் வள்ளுவர். துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் 'தம்' பிடிக்கச் சொல்லிவிட்டு, 'மூச்சை நிறுத்துங்கள்' என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக்கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்' என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம். சோதனை முடிந்த பிறகு, இப்போது’மூச்சைவிட்டு விடுங்கள்' என்றாராம் டாக்டர். மூச்சை விட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர், மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.