தம்பியுடையான் படைக்கஞ்சான்!
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
இது கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா என்றாலும், இதே விழாவை இன்னொருவருக்கு கருணாநிதி நடத்தியிருந்தால் அவர் இன்னும் என்னென்ன செய்திருப்பார் என்று திரும்பிப் போகிறவர்கள் ஒவ்வொருவரும் பேசிக் கொண்டே போவார்கள். அப்படி எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும், அதில் தனி முத்திரையைப் பொறிக்கத்தக்க, தனித்திறமை பெற்ற எனது அருமைத் தம்பிக்கு இந்த அரிய பாராட்டு கிடைப்பது எனது குடும்பத்திற்குக் கிடைத்த பாராட்டு என்று மகிழ்ச்சி அடைகிறேன். அத்தோடு நெடுங்காலமாக, பலமுறை சொல்லிக்கொண்டு வந்தபடி இப்படிப் பட்டவரைத் தம்பியாகப் பெற்ற நான் பெருமிதம் அடைவதில் எந்தவிதமான குந்தகமும் இல்லை. “தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” என்பதை இதனால்தான் பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இப்படிப்பட்ட தம்பிமார்களின் தொகை வளரவேண்டும்; நாடெங்கும் இருக்கவேண்டும்; நல்லவர்களுக்குத் துணைபுரியவேண்டும்; நாட்டு ஏற்றத்திற்குப் பாடுபடவேண்டும்; இது எனது வேண்டுகோள்.
இவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்.
இவ்வாறு பேரறிஞர் அண்ணா அவர்கள் உரையாற்றினார்.